உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள்

 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீடு முகாம், தாராபுரம் ரோடு, பல்லவராயன்பாளையம், ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் டி.ஜே., பார்க் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வம், ராமச்சந்திரா மிஷன் ஆசிரம முதன்மை நிர்வாகி அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு, செயற்கை காலுக்கான அளவீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட 13 பேருக்கு, மொத்தம் 82,500 மதிப்பிலான செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. அனைவருக்கும் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரம தலைமை புரவலர் ராஜதானி குப்தா, பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ