உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆக்கிரமிப்புகள் அகற்றம்,: பி.என். ரோட்டில் அதிரடி

 ஆக்கிரமிப்புகள் அகற்றம்,: பி.என். ரோட்டில் அதிரடி

அனுப்பர்பாளையம்: திருப்பூர் - பி.என். ரோட்டில், போயம்பாளையம் முதல் அண்ணா நகர் வரை ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில், 1.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த மாதம் 21 முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று காலை, கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் கணக்கம்பாளையம் பிரிவு வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடை முன்பு ரோட்டை ஆக்கிரமித்து போடப்பட்ட தளம், ஓட்டல் முன்பு அமைக்கப்பட்டிருந்த அடுப்பு உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன. மேற்கூரைகள் அகற்றப்பட்டன. பலர் அவர்களே முன் வந்து தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினர். ரோட்டை ஆக்கிரமித்து கடை அமைக்கக்கூடாது. மீறி ஆக்கிரமித்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை