உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறந்த சேவை விருது பெற்ற ரேவதி மெடிக்கல் சென்டர்

சிறந்த சேவை விருது பெற்ற ரேவதி மெடிக்கல் சென்டர்

திருப்பூர்; மருத்துவ துறையில் அர்ப்பணிப்பு, சமூக நலன் சார்ந்த பணியை ஊக்குவித்து வரும், திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்திக்கு, சென்னையில் நடந்த விழாவில், தமிழக கவர்னர் ரவி கேடயம் வழங்கி, பாராட்டினார். விருது பெற்ற டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: இந்த பாராட்டு ரேவதி மருத்துவமனைக்கு மட்டுமே உரியதல்ல. கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்பூர் மக்கள் தரும் ஆதரவு, தொண்டு நிறுவனங்கள், திருப்பூர் பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் தரும் ஆதரவின் விளைவாக, ரேவதி மெடிக்கல் சென்டர் முதன்மை மருத்துவ மனையாக உயர்ந்துள்ளது. கவர்னரின் இந்த பாராட்டு, திருப்பூர் மாவட்ட மக்களுக்குரியது. இதயம், சிறுநீரகம், அவசர சிகிச்சை, உயிர்காக்கும் சிகிச்சை, எலும்பு முறிவு, விபத்து தலைக்காயம் உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. 210 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை, தேசிய தரச்சான்றிதழை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. ரேவதி மெடிக்கல் சென்டரில், 5,000 இருதய சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. அனுபவமிக்க மருத்துவக்குழு, செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என, 24மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ரேவதி மெடிக்கல் சென்டர், ரேவதி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, புதிய தலைமுறை மருத்துவ உதவியாளர்களை உருவாக்கி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை