உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐகோர்ட் உத்தரவுப்படி உயர்த்தப்படாத சம்பளம்: துாய்மைப்பணியாளர் தொடர் போராட்டம்

ஐகோர்ட் உத்தரவுப்படி உயர்த்தப்படாத சம்பளம்: துாய்மைப்பணியாளர் தொடர் போராட்டம்

திருப்பூர்;ஐகோர்ட் உத்தரவுப்படி சம்பளம் உயர்த்தப்படாததால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணி, 'அவுட்சோர்சிங்' முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையில் பணியாற்றி வந்த தற்காலிக துாய்மைப் பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். 'துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.'அரசாணை (2டி), 62ன் படி, குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில், நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக, 638 ரூபாய்; குடிநீர் பணியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 715 ரூபாய் வழங்கப்பட வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகங்கள் இந்த சம்பளம் வழங்க முன்வராத நிலையில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.அதன்படி திருமுருகன்பூண்டி, பல்லடம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை நகராட்சிகளின் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் இன்று (25ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபடுவது எனவும், பின், மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று பெருந்திரள் தர்ணா நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.----------------'எங்களுக்கு மட்டும்ஏன் இந்த நிலை?'டி.பி.சி., ஊழியர்களுக்கு, 400 - 420 ரூபாய்; குடிநீர் பணியாளர்களுக்கு, 560 ரூபாய்; வாகன ஓட்டுனர்களுக்கு, 500 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் பி.எப்., தொகையும் முறையாக கணக்கில் வைக்கப்படுவதில்லை. துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டும், நகராட்சிகளின் இயக்குனர் பரிந்துரைத்தும் கூட, நகராட்சிகளின் கமிஷனர்கள், ஊதிய உயர்வுக்கு அனுமதி வழங்காமல் உள்ளனர்.இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், 'ஐகோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி, தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தியும், நகராட்சி கமிஷனர்கள் மவுனம் காக்கின்றனர். மண்டல இயக்குனரிடம் கலந்தாலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறிய அவர்கள், காலம் தாழ்த்துகின்றனர். எனவே, குறைந்தபட்ச சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.- சுப்ரமணியம், தலைவர், திருமுருகன்பூண்டி கிளை,திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்(சி.ஐ.டி.யு.,)திருப்பூர், ஜூன் 25-ஐகோர்ட் உத்தரவுப்படி சம்பளம் உயர்த்தப்படாததால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணி, 'அவுட்சோர்சிங்' முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையில் பணியாற்றி வந்த தற்காலிக துாய்மைப் பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். 'துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.'அரசாணை (2டி), 62ன் படி, குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில், நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக, 638 ரூபாய்; குடிநீர் பணியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 715 ரூபாய் வழங்கப்பட வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகங்கள் இந்த சம்பளம் வழங்க முன்வராத நிலையில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.அதன்படி திருமுருகன்பூண்டி, பல்லடம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை நகராட்சிகளின் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் இன்று (25ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபடுவது எனவும், பின், மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று பெருந்திரள் தர்ணா நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை