உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுட்டெரிக்குது வெயில்; பதறவைக்குது காட்டுத் தீ

சுட்டெரிக்குது வெயில்; பதறவைக்குது காட்டுத் தீ

பல்லடம்;பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளை, தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கோடைக்கு முன்னதாகவே, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக, பல்லடம் வட்டாரத்தில், காட்டுத்தீ பரவு வது அன்றாடம் நடந்து வருகிறது. காட்டுத்தீ பரவல் காரணமாக, மேய்ச்சல் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.காடா துணி உற்பத்தி தொழில், பல்லடம் வட்டாரத்தில் பரவலாக நடந்து வருகிறது. காட்டுத்தீ பரவலால், துணி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களிலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, பல்லடம்- - செட்டிபாளையம் ரோட்டில், தனியார் மில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எறிந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரத்துக்கு மேல் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல், வடுகபாளையம் புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலுாத்துப் பாளையம் கிராமத்திலும் காட்டுத்தீ பரவியது கட்டுப்படுத்தப்பட்டது.நேற்று திருச்சி ரோடு அரசு மருத்துவமனை எதிரே உள்ள எலக்ட்ரானிக் கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தீ கட்டுப் படுத்தப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தீ விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, தொழில் துறையினர் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை