உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்...

மக்களிடம் விழிப்புணர்வுநடப்பாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்கள் மத்தியில் மத்திய அரசின் செல்வாக்கை அதிகரிக்க, பா.ஜ., கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கான ஊக்கத்தெகை, கிசான் கிரெடிட் கார்டு என விவசாயிகள் நலத்திட்டங்கள், மருத்துவ காப்பீடு, அனைத்துக்கடன் திட்டம் ஆகியன குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசி, மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் செல்வாக்கு உயரும் என பா.ஜ.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.--இலவச சைக்கிள் வினியோகம்பல்லடம் வட்டார அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் கவிதாமணி, மாணவியருக்கு, சைக்கிள்களை வழங்கினார். கணபதிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர், 361 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், உதவி தலைமையாசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.---மண் கடத்தல் குறித்து மனுபல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், தாசில்தார் சிவக்குமாரிடம் அளித்த மனுவில், 'பல்லடம், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில், சுரங்கம் போன்று பள்ளங்கள் தோண்டப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் கடத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டும், கனிம வள கடத்தல் குறித்து அதிகாரிகள் யாருக்குமே தெரியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எனவே, இது குறித்து விசாரித்து, மண் கடத்தியவர்கள், அதில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.---ஸ்ரீ ராமர் கோவில் அழைப்பிதழ்உ.பி., மாநிலம், அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம், 22ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, பா.ஜ., வினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ பொது செயலாளர் குமார், செயலாளர் நாராயணமூர்த்தி, துணை தலைவர் காசிராஜன் உட்பட பலர் பொடாரம்பாளையம், கற்பகாம்பாள் நகர், அண்ணா காலனி ஆகிய பகுதிகளுக்கு சென்று, 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினர்.---மக்களிடம் விழிப்புணர்வுநடப்பாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்கள் மத்தியில் மத்திய அரசின் செல்வாக்கை அதிகரிக்க, பா.ஜ., கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கான ஊக்கத்தெகை, கிசான் கிரெடிட் கார்டு என விவசாயிகள் நலத்திட்டங்கள், மருத்துவ காப்பீடு, அனைத்துக்கடன் திட்டம் ஆகியன குறித்து பொதுமக்களிடம் பேசி, பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் செல்வாக்கு உயரும் என பா.ஜ.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி