உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உலக நலன் வேண்டி சிறப்பு வேள்வி வழிபாடு

 உலக நலன் வேண்டி சிறப்பு வேள்வி வழிபாடு

திருப்பூர்: உலக நலன் வேண்டி திருப்பூர் மனவளக்கலை மன்றத்தில் சிறப்பு வேள்வி நடைபெற்றது. திருப்பூர் அமர்ஜோதி நகர், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு சிறப்பு தியானப் பயிற்சி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு ஆகியன நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். வெள்ளியங்கிரி முன்னிலை வகித்தார். ஈரோடு, மனநல ஆலோசகர் ரமேஷ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அறக்கட்டளை செயலாளர் தங்கராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து சிறப்பு தியான வகுப்பு நடைெபற்றது. முன்னதாக உலக நலன் வேண்டி சிறப்பு வேள்வி வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை