உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாநில ஜூனியர் கபடி போட்டி; அணியினருக்கு வழியனுப்பு விழா

 மாநில ஜூனியர் கபடி போட்டி; அணியினருக்கு வழியனுப்பு விழா

திருப்பூர்: திருச்சியில் நடக்கும் மாநில கபடி போட்டிக்கு செல்லும், மாவட்ட கபடி ஜூனியர் அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது. நவ. 21 முதல் 23 வரை, திருச்சியில் மாநில ஜூனியர் கபடி போட்டி, வீராங்கனைகளுக்கு நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு, நவ., முதல் வாரம், திருப்பூரில் நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 156 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களில், 16 பேர் கொண்ட வீராங்கனையர் மாவட்ட ஜூனியர் கபடி அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த அணிக்கு, மாவட்ட கபடி கழகம் சார்பில், வஞ்சிபாளையம், தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லுாரியில், மூன்று நாட்கள் கபடி பயிற்சி முகாம் நடந்தது. இப்பயிற்சி முடித்த அணியினரை, மாநில கபடி போட்டிக்கு வழியனுப்பும் விழா, உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி செயலர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், முதன்மை நிர்வாக அதிகாரி ரேச்சல் நான்ஸிபிலிப், கல்லுாரி முதல்வர் மோகன சவுந்தரி, மாவட்ட கபடி கழக தலைவர் ரோலக்ஸ் மனோகரன், துணைத்தலைவர் ரோலக்ஸ் சுப்ர மணியம், இணைச் செயலளர் வாலீசன், மாவட்ட கபடி கழக நடுவர் குழு சேர்மன் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன், மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம் மாநில போட்டிக்கு செல்லும் ஜூனியர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். அணியின் செயலர் செந்தில்குமார், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர், அணி மேலாளர் ஸ்ரீபிரியங்கா, பயிற்சியாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை