அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டில், 864 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து தற்போது வகுப்புகள் நடக்கிறது. அரசின் உத்தரவு படி தொடர்ந்து நேரடி மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. தற்போது பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபரங்களை அறிந்து கொள்ள, வேலை நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை கல்லுாரி அலுவலகத்தை அணுகலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.