உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவன்மலையில் தைப்பூச கொடியேற்றம் கோலாகலம்

சிவன்மலையில் தைப்பூச கொடியேற்றம் கோலாகலம்

திருப்பூர்:காங்கயம், சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழாவுடன் துவங்கியது.நேற்று காலை, வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகம், மதியம் விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் பக்தர்கள் கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது.சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலையை வலம் வந்தது. மதியம், மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினர். வரும், 25ம் தேதி காலை, 10:00 மணிக்கு மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26ம் தேதி நடக்கிறது. 26, 27ம் தேதிகளில் மலையை வலம் வரும் தேர், 28ம் தேதி நிலை அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை