உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கொலையானவர்கள் அடையாளம் தெரிந்தது

 கொலையானவர்கள் அடையாளம் தெரிந்தது

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகே, கடந்த 18ம் தேதி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்க நபரின் சடலத்தை திருப்பூர் வடக்கு போலீசார் மீட்டனர். 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்ட போது, உடன் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டு, தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரிந்தது. இறந்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த வேல்முருகன், 40. பல்லடத்தில் தங்கி, ரயில்வே ஸ்டேஷன் அருகே டீ, காபி, தண்ணீர் பாட்டில் விற்று வந்தது தெரியவந்தது. தப்பி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: கடந்த, 19 ம் தேதி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையம் அருகே நொய்யல் ஆற்று அருகே தலையில் காயத்துடன் வாலிபர் இறந்து கிடப்பது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். பெருந்துறையை சேர்ந்த விஜயகுமார், 35 என்பதும், மதுபோதையில் இருந்த போது, இவரை தலையில் அடித்து கொலை செய்ததும் தெரிந்தது. இவரை அழைத்து வந்தது யார் உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை