உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் கண்ணாடி உடைத்து பணம் திருடியவர் கைது

கார் கண்ணாடி உடைத்து பணம் திருடியவர் கைது

அவிநாசி;அவிநாசியில் கடந்த ஜனவரி 13ல் பெரிய கோவில் தேர் அருகில் ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி., முகவர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான காரில் இருந்து,முன் பக்க கண்ணாடியை உடைத்து 40,000 ரூபாய் திருடப்பட்டது. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மொபைல் போன் கடையில் வேலை பார்த்து வருபவர் நந்தகுமார் என்பவர் டூவீலரை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது டூவீலர் திருடு போனது.இரு வழக்கிலும் தொடர்புடைய கரூர் மாவட்டம், குளித்தலை நா.பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் மகன் கணேஷ் குமார், 32,என்பவரை அவிநாசி போலீசார் கைது செய்தனர்.இவருக்கு, பல்வேறு வழக்குகளிலும் தொடர்பு உள்ளது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை