உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாங் - டா போட்டியில் வென்ற மாணவர்

தாங் - டா போட்டியில் வென்ற மாணவர்

உடுமலை;மாநில அளவிலான கேலோ இந்தியா போட்டியில், மடத்துக்குளம் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான கேலோ இந்தியா போட்டி, கோவை கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில், தற்காப்பு கலையான தாங் - டா போட்டியில், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளி மாணவர் மகந்த் கலந்து கொண்டார்.அவர், 51 - 56 எடைப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதன் வாயிலாக, தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். இதன் வாயிலாக, மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும், கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.இவரை, பள்ளித்தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ