உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசிக்கு வந்த தலைக்காவிரி தீர்த்தம் ஊர்வலமாக சுமந்து சென்ற பெண்கள்

அவிநாசிக்கு வந்த தலைக்காவிரி தீர்த்தம் ஊர்வலமாக சுமந்து சென்ற பெண்கள்

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது.கொங்கேழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 2ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக, 24ம் தேதி மஹா கணபதி ேஹாமத்துடன் யாக பூஜைகள் துவங்கின.நேற்று மாலை யாகசாலை பூஜையின் துவக்கமாக, காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக, 27ம் தேதி கர்நாடக மாநிலம், தலைக்காவிரிக்கு தீர்த்தம் எடுத்து வர பக்தர்கள் சென்று, நேற்று முன்தினம் இரவு திரும்பியனர்.இதனை தொடர்ந்து, பக்தர்கள் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகளிலும், தீர்த்தக்குடம் சுமந்தும், முளைப்பாலிகை எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். சிவகண பூத வாத்தியங்களை சிவனடியார்கள் இசைக்க, குதிரை நாட்டியமாட, ஊர்வலம் கோவிலை அடைந்தது. அதன்பின், யாகசாலையில், தீர்த்தக்குடங்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை