உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளி மரணத்தில் திருப்பம் உடன் பணிபுரிந்தவர் கைது

தொழிலாளி மரணத்தில் திருப்பம் உடன் பணிபுரிந்தவர் கைது

திருப்பூர்:தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் விருப்பாச்சி, 55. திருப்பூரை அடுத்த ஊதியூர், புங்கந்துறையில் தனியார் கோழிப்பண்ணையில் தங்கி, பணியாளர்களுக்கு சமையல் செய்தும், கட்டட பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 22ம் தேதி இரவு வழக்கம் போல் துாங்க சென்றவர், காலையில் எழுந்திருக்கவில்லை. அவரை பரிசோதித்த போது இறந்தது தெரிந்தது. ஊதியூர் போலீசார் விசாரித்தனர்.அவர், இறப்பில் சந்தேகம் இருந்த காரணத்தால், உடன் பணிபுரிந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், 'விருப்பாச்சி சமையல் செய்வது சரி இல்லை,' என கூறி, அங்கிருந்தவர்கள் கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த ஜாய்வர்க்கீைஸ, 50 சமையல் செய்ய கூறினார்.இதனால், ஜாய்வர்க்கீைஸ சொந்த ஊருக்கு போகுமாறு விருப்பாச்சி கூறியுள்ளார். தனக்கு வேலையில்லாமல் போய் விடும் என்று நினைத்த ஜாய்வர்க்கீஸ், துாங்க சென்ற விருப்பாச்சியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக ஜாய்வர்க்கீஸை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை