உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனையகங்களை கூடுதலாக திறக்க எதிர்பார்ப்பு

மீன் விற்பனையகங்களை கூடுதலாக திறக்க எதிர்பார்ப்பு

திருப்பூர் : அனைத்து ரக மீன்களும் தரமான முறையில், குறைந்த விலையில் விற்பனை செய்யும் நெய்தல் அங்காடிகள் அதிகளவில் திறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.மீன் விற்பனையை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழக மீன்வளர்ச்சி கழகம் சார்பில், திருப்பூரில் மீன் விற்பனை பிரிவு துவங்கப்பட்டது. குமார்நகர் மற்றும் வீரபாண்டி, அவினாசி பகுதிகளில் 'நெய்தல் அங்காடி அமைக்கப்பட்டுள்ளன. கட்லா, ரோகு, மிர்கால் போன்ற ஆற்று மீன்கள், வஞ்சிரம், அயிரை போன்ற கடல் மீன்கள் சுகாதாரமான முறையில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் நெய்தல் அங்காடியில் மீன் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அனைத்து பகுதிகளிலும் தரமான மீன்கள் கிடைக்கும் வகையில், கூடுதல் நெய்தல் அங்காடிகள் திறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:மீன் தேவைக்காக மார்க்கெட் இல்லாததால், தனியார் மீன் விற்பனையாளர்களையே நாடும் நிலை உள்ளது. கடலோர பகுதிகளில் இருந்து மீன் வாங்கிவந்து, பல தினங்கள் வைத்திருந்து தரமற்ற மீன்களை, அதிக விலைக்கு விற்கின்றனர். ஈக்கள்,கொசுக்கள் அதிகளவு மொய்த்து, சுகாதாரம் இல்லாமல் இருந்தாலும், அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது; இதனால் உடல் உபாதை ஏற்படுகிறது. மீன் விற்பனை செய்வோர் கழிவை, குடியிருப்பு பகுதிகளில் வீசி செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் சுகாதாரம் பாதிக்கிறது.தரமான மீன்கள் விற்பனை செய்யும் வகையில், மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நெய்தல் அங்காடிகளில் திறக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுவதால், சுகாதாரமான முறையில் தரமான மீன்கள் கிடைக்கின்றன. வெளிமார்க்கெட்டை விட நெய்தல் அங்காடியில் குறைந்த விலையில் அனைத்து மீன்களும் கிடைப்பதால், செலவும் குறைகிறது; நெய்தல் அங்காடியில் மீன் வாங்கவே பலரும் விரும்புகின்றனர். தற்போது நான்கு அங்காடிகளே உள்ளதால், தொலைவில் இருந்து மீன் வாங்க வருவதற்கு சிரமம் ஏற்படுகிறது.குறைந்த விலையில் தரமான மீன்கள் கிடைக்கும் வகையிலும், நகரின் சுகாதாரம் கருதியும் அனைத்து பகுதிகளிலும் நெய்தல் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி