| ADDED : ஆக 14, 2011 03:04 AM
திருப்பூர் : 'சாய ஆலைகள் இயங்காமல் இருப்பதால், 'ஜாப் ஒர்க்'
நிறுவனங்களின் கடன் மீதான வட்டியில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய
வேண்டும்,' என, 'நிட் காம்பாக்டர்ஸ் அசோசியேஷன்' சார்பில் அரசுக்கு
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.'நிட் காம்பாக்டர்ஸ் அசோசியேஷன்' சங்க 13வது
மகாசபை கூட்டம், திருப்பூர் வேலன் ஓட்டலில் நடந்தது. தலைவர் துரைசாமி தலைமை
வகித்தார். செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
பொருளாளர் முத்துசாமி, வரவு - செலவு அறிக்கையை
சமர்ப்பித்தார்.'திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வசதியாக, எட்டு
கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, பறக்கும் பாலங்கள் அமைக்க அரசு முன்வர
வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேலாக, சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், 'ஜாப் ஒர்க்'
நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.எனவே, வரும் ஆறு
மாதங்களுக்கு வங்கி கடன் மீதான வட்டியில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய
வேண்டும். ஆரஞ்சு வகைப்பட்ட சலவை ஆலைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.