| ADDED : ஆக 14, 2011 03:05 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள்
தற்காலிகமாக தனியார் கட்டிடத்தை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆய்வு
செய்தார்.திருப்பூரில் முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு
நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் இரண்டு குற்றவியல்
நடுவர் நீதிமன்றங்கள், இரண்டு விரைவு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
திருப்பூர் மாவட்டமாக செயல்பட துவங்கிய பின், மாவட்ட அளவில் நீதிமன்றங்கள்
அமைக்க அரசு மற்றும் நீதித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
நீதிமன்றங்கள் செயல்பட இடம் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில்
நேற்று திருப்பூர் வந்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், பி.என்.,
ரோடு லட்சுமி நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
இங்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம், மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம்
மற்றும் மாவட்ட விரைவு குற்றவியல் நீதிமன்றம் தற்காலிகமாக செயல்படுத்துவது
குறித்து ஆய்வு செய்தார். 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள இக்கட்டிடத்தில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டப்படும் வரை தற்காலிகமாக மாவட்ட நீதிமன்றங்கள் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.