உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆற்று மணலுக்கு மாற்றாக "கிரஷர் மணல் அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

ஆற்று மணலுக்கு மாற்றாக "கிரஷர் மணல் அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

திருப்பூர் : 'மணல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதோடு, கடும் தட்டுப் பாடு நிலவுவதால், அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு, 'கிரஷர்' மணலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்,' என, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால், கடந்த சில மாதங்களாக ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்கு மணல் கிடைக்காமல் சிரமம் ஏற்படு கிறது. கடந்தாண்டு ஒப்பந்தம் செய் யப்பட்ட கட்டுமான பணிகளை கூட முடிக்க முடியாமல், சிரமமான சூழ்நிலை நீடித்து வருகிறது.தொழிற்சாலைகள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டுமான பணிகள் என ஒவ்வொரு ஆண்டும் மணலுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மணல் என்பது மற்ற பொருட்களைபோல், உற்பத்தி பொருள் கிடையாது. ஆற்றில் இருந்து அள்ளி எடுக்கப்படும் இயற்கை வளம். எனவே, மணல் பயன்பாட்டுக்கு சரியான மாற்றுப்பொருளை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.எனவே, சாதாரண மணலுக்கு பதிலாக, கல்குவாரிகளில் தயாரிக்கப்படும் 'கிரஷர்' மணலை பயன்படுத்த திட்டமிட வேண்டும். ரயில்வே கட்டுமான பணிகளுக்கு மணலுக்கு மாற்றுப்பொருளாக, 'கிரஷர்' மணல் பயன்படுத்தப்படுகிறது. விலை குறைவாக இருக்கும் என்பதோடு, மணலுக்கு மாற்றுப்பொருளாகவும் இருப்பதால், மணலுக்கான தேவை குறைந்து, தட்டுப்பாடு நீங்கும்.எனவே, ஒன்றிய கட்டுமான பணி களின்போது, கிரஷர் மணலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இதுகுறித்து ஆலோசித்து, நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்பது ஒப்பந்ததாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.ஊரக வளர்ச்சித்துறை (கட்டுமான பிரிவு) உயரதிகாரியிடம் கேட்டபோது, 'மணலுக்கு சரியான மாற்றுப் பொருளாக 'கிரஷர்' மணலை தாராளமாக பயன்படுத்தலாம் என கட்டுமான தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை மற்றும் மத்திய பொதுப்பணித்துறை பணிகளுக்கு 'கிரஷர்' மணல் பயன்படுத்தப்படுகிறது.'பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பணிகளுக்கு 'கிரஷர்' மணலை பயன்படுத்த, தமிழக அரசு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. கட்டு மான பிரிவு செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் சார்பில், 'கிரஷர்' மணலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்கும் பட்சத்தில், ஆற்று மணல் திருடப்படுவது குறைவதோடு, மணலுக்கான தேவை குறைந்து நிலைமை சீராகும். 'கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டுமான பணியை ஒவ்வொரு நிலையிலும் கண்காணிப்பதால், இதில் தவறு நடக்க வாய்ப்பிருக்காது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி