திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து உள் ளாட்சி அமைப்புகளிலும் சேர்த்து 14,51,848 வாக் காளர்கள் உள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வாக்காளர் பட்டியல் நேற்று போட்டோ இல்லாமல் வெளியிடப்பட்டது.உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியல் வாக்காளர்களின் போட்டோவுடன் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்ற வகையில் வார்டு மற்றும் பாகங்கள் திருத்தி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. இப்பணி முடிவடைந்து, மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் கமிஷன் இணைய தளத்தில், மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை 'டவுன் லோடு' செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டோ இல்லாத பட்டியலை வெளியிட முடிவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.திருப்பூர் மாநகராட்சியில் 2,14,659 ஆண், 1,93,629 பெண், திருநங்கை - 12 என மொத்தம் 4,08,300 வாக்காளர் உள்ளனர். நகராட்சிகள்:உடுமலை: ஆண் -21,572; பெண் - 21,818தாராபுரம்: ஆண் - 18,399; பெண் -18839காங்கயம்: ஆண் -11,402; பெண் -11,249வெள்ளகோவில்: ஆண் - 13,342; பெண் - 13,514. திருநங்கை: 1பல்லடம்: ஆண் -12,249; பெண் -11,868பேரூராட்சிகள்:அவிநாசி: ஆண் - 7,892; பெண் -7989திருமுருகன்பூண்டி: ஆண் -8290; பெண் -7695கன்னிவாடி: ஆண் -1670; பெண்-1671கொளத்துப்பாளையம்: ஆண் -6694; பெண்- 6694மூலனூர்: ஆண்-5608; பெண் - 5669 ருத்ராவதி: ஆண் - 2643; பெண், -2673 சின்னக்காம்பாளையம்: ஆண் - 4273; பெண்- 4067 குன்னத்தூர்: ஆண் - 2686; பெண் - 2653 ஊத்துக்குளி: ஆண் - 2977; பெண் -2937 முத்தூர்: ஆண்- 4623; பெண் -4700 சாமளாபுரம்: ஆண்- 5809; பெண்- 5533 மடத்துக்குளம்: ஆண்- 6912; பெண் - 6697 கணியூர்: ஆண் -2146; பெண் -2300கொமரலிங்கம்: ஆண்- 4353; பெண் -4389 தளி: ஆண் - 2094; பெண்- 2138 சங்கராமநல்லூர்: ஆண் - 3711; பெண் -3482 ஊராட்சி ஒன்றியங்கள்: அவிநாசி: ஆண் - 43634; பெண் - 41912 மூலனூர்: ஆண்- 18012; பெண் - 17931 ஊத்துக்குளி: ஆண் - 27306; பெண் -26057 உடுமலை: ஆண் - 58674; பெண் - 57911 குடிமங்கலம்: ஆண்- 28330; பெண் - 27830 காங்கயம்: ஆண்- 22090; பெண் -21273; திருநங்கை - 1 குண்டடம்: ஆண் -27080; பெண்- 26006 பல்லடம்: ஆண் - 37925; பெண் - 36292 தாராபுரம்: ஆண் -25445; பெண் -24961 திருப்பூர்: ஆண் -23576; பெண் -22435 மடத்துக்குளம்: ஆண் - 18029; பெண் - 17327 பொங்கலூர்: ஆண்- 30814; பெண் - 29305 வெள்ளகோவில்: ஆண் -17810; பெண் -17661 மாவட்ட அளவில் மொத்தம் 7,42,729 ஆண் மற்றும் 7,09,105 பெண், திருநங்கை 14 என மொத்தம் 14,51,848 வாக்காளர்கள் உள்ளனர்.