உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை பட்டி பெருகோணும்... பால் பொங்கி வழியோணும் மாட்டுப்பொங்கல் மகத்துவம்

நாளை பட்டி பெருகோணும்... பால் பொங்கி வழியோணும் மாட்டுப்பொங்கல் மகத்துவம்

உழவுத் தொழிலுக்கு உற்ற துணையாக இருந்து, சூரியன், உணவு உற்பத்திக்கு உதவுகிறான். அவனுக்கு இணையான பணிகளை, கால்நடைகளும் செய்கின்றன. கால்நடைச் செல்வங்களுக்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்து நம் நன்றியைத் தெரிவிக்கும் நாள் மாட்டுப் பொங்கல்.நாளை (16ம் தேதி) மாட்டுப்பொங்கல்; இதைப் 'பட்டிப் பொங்கல்' என்று அழைப்பதும் உண்டு. பட்டி என்றால் மாடுகளை அடைத்துவைக்கும் இடம். மாட்டுப்பொங்கலன்று, மாடு களைக் குளிப்பாட்டி அலங்கரிப்பர்; மாட்டுக் கொட்டகைக்கு முன் பொங்கல் இடுவர்; அதை மாடுகளுக்கு உண்ணத் தருவர்; அவற்றை ஊர்வல மாக அழைத்துச் செல்வர். மாலவன் கோயில் களுக்கு மாடுகளை அழைத்துச் செல்லும் வழக்கமும் உண்டு. அங்கு மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து நெற்றி யில் குங்குமம் இடுவர்.மாடுகளுக்கு காதோலை, கருகமணி ஆகியனவும் அணிவித்து அலங்கரிப்பர்.காங்கயம், நத்தக்காடையூர், பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடந்து வருகிறது. சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.நேற்று, நடந்த சந்தைக்கு 94 கால்நடைகள் வந்தன. 46 கால்நடைகள் 22 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி சந்தையில் பொங்கலிடப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், உள்ளிட்டவை அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாட்டுப்பொங்கலையொட்டி மாடுகளுக்கு தேவையான உபகரணங்களை விவசாயிகள் வாங்க கடைகளில் திரண்டனர்.வாடி வாசல் திறக்குதுவளர்ந்த காளை திமிருதுஉழவர்தான் பெரியாளுஉணவ அள்ளி தருவாருஉலகுக்கு அவர் வேருஅறம்தானே அவர் சீரு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை