உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆலோசனை கூறிய வியாபாரிகள்; மார்க்கெட் வளாகத்தில் மாற்றங்கள்

ஆலோசனை கூறிய வியாபாரிகள்; மார்க்கெட் வளாகத்தில் மாற்றங்கள்

திருப்பூர் : திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் தெரிவித்த ஆலோசனைகளின் படி கட்டட கட்டுமானத்தில் திருத்தரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருப்பூர் காமராஜ் ரோட்டில், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே, மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம் உள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இவ்வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இதில் உள்ள கடைகளுக்கான ஏலம் விடும் பணி இழுபறியாகவே உள்ளது. மார்க்கெட் கட்டட கட்டுமானத்தில் சில மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் சில ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.கடந்த வாரம் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக வளாகத்தில் கூடுதல் கழிப்பறைகள்; கடைகள் அமைந்துள்ள பகுதியில் கூடுதல் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துக்காக ஜன்னல் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதை 'தடை' எதற்காக?

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், காமராஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மார்க்கெட் கட்டடம் அமைந்துள்ள இடம் வழியாக ஒரு பொது வழிப்பாதை உள்ளது.கே.எஸ்.சி., பள்ளி, பழைய நகர் நடுநிலைப் பள்ளி, முத்துப்புதுார் துவக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் இப்பாதையைப் பயன்படுத்தினர். மேலும், பொன்னம்மாள் தாய் சேய் நல மையம் ஆகியவற்றுக்குச் செல்வோரும் இந்த பாதையைப் பயன்படுத்தினர்.மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணி காரணமாக, பாதுகாப்பு கருதி இப்பாதை மூடப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிவடைந்து கட்டடம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள நிலையிலும் இந்த பாதை திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை