உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளம் பாலம் பகுதியில் வாகன நெரிசல்

வளம் பாலம் பகுதியில் வாகன நெரிசல்

திருப்பூர்: 'வளம்' பாலம் அருகே கால்வாய் கட்டுமானப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் பாலம், வளம் பாலம் ஆகியன அமைந்துள்ளன. வளர்மதி பாலத்துக்கு அடுத்ததாக உள்ள பாலங்கள் என்பதால், இந்த இரு பாலங்களிலும் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் பயன்படுத்துகின்றன.பாலத்தை ஒட்டி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தும் வகையில், பணி நடக்கிறது. அவ்வகையில் பாலத்தை ஒட்டி மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.'வளம்' பாலம் பகுதியில் இதன் காரணமாக பாலம் மீது ஒரு பகுதி பாதையாகப் பயன்படுத்தும் விதமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்லும் வகையில் இடம் உள்ளது. பாலத்தை ஒட்டி குழி தோண்டி கால்வாய் கட்டும் பணி துவங்கியுள்ளதால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் பெரும் அவதி நிலவுகிறது.இந்த இடத்தில் நாலாபுறங்களிலிருந்தும் வாகனங்கள் வந்து திரும்புகின்றன.கார் போன்ற இலகு ரக வாகனம் ஒன்று மட்டுமே செல்லும் வகையில் தான் இடம் உள்ளது.இதனால், எந்நேரமும் நான்கு ரோடுகளிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.இருப்பினும் நெருக்கியடித்து வரும் வாகனங்களால் பெரும்பாலும் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது.வடிகால் கட்டுமானப் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை