உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சதம் நோக்கி நகரும் வெயில்

சதம் நோக்கி நகரும் வெயில்

திருப்பூர்:தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள வாராந்திர வானிலை நிலவரம்:திருப்பூர் மாவட்டத்தில், வரும், 28ம் தேதி வரை, அதிகபட்சம், 36 முதல், 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும்; குறைந்தபட்சம், 23 முதல், 25 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவும். காலை நேரம் காற்றின் ஈரப்பதம், 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வானிலை அறிக்கையின்படி, 98.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது. வரும் நாட்களில், இது, 100 டிகிரியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உஷ்ணத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை