உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா 

 மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா 

உடுமலை: உடுமலை அருகே, தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை பணியுடன் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ரேஷன் கடை ஊழியருக்கு, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மக்கள், பாராட்டு தெரிவித்தனர். உடுமலை தாலுகா குருவப்பநாயக்கனுார் கிராம ரேஷன் கடையில், பணியாற்றி வருபவர் சரவணக்குமார். மாற்றுத்திறனாளியான இவர், பணியாற்றும் கிராமத்திலும், இதர பகுதிகளிலும் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாற்றுத்திறனாளி கள் தினத்தையொட்டி, பணிக்கு வந்த சரவணக்குமாருக்கு, குருவப்ப நாயக்கனுார் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் அவருக்கு, மாலை அணிவித்து பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் ஆதவன்சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை