உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அழிவின் விளிம்பில் நீர் நிலைகள்: உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டை

அழிவின் விளிம்பில் நீர் நிலைகள்: உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டை

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியத்தில் ஊராட்சிகள் தோறும் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடுதோறும் குப்பை அள்ளப்படுகிறது.ஆனால், அப்பணி பெயரளவில் மட்டுமே நடப்பதால் குப்பைகள் பல இடங்களிலும் தேங்கி கிடக்கிறது. பெரும்பாலான ஊராட்சிகள் திடக்கழிவு மேலாண்மையில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், பொதுமக்கள் பி.ஏ.பி., வாய்க்கால், ரோட்டோரங்கள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலை புறம்போக்குகள் போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். இவற்றில் பெரும் பகுதி பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள். இவற்றால் நீர் நிலைகள் அழிவை நோக்கி செல்கின்றன.ஏற்கனவே, கோடை மழை பொய்த்துப் போனது. நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. அடுத்து வரும் பருவமழையை நீர் நிலைகளில் சேமித்தால்தான் அடுத்தாண்டு குடிநீராவது கிடைக்கும் நிலை உள்ளது. இதற்கு குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை துார்வாரி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Saiganesh Saiganesh
மே 13, 2024 08:00

தமிழ் நாட்டில் உள்ள நீர் நிலைகளில் அரசு பஸ் நிலையங்கள் மருத்துவமனைகள் அரசு கட்டிடங்கள் கட்டி வைத்துள்ளது அதுபோக அரசியல்வாதிகள் அக்கிரமித்து வீட்டுமனைகள் அமைத்து விற்பனை மற்றும் எதிர்கட்சி ஆளும் கட்சி என இணைந்து ஆக்கிரமித்து சகல வசதிகளுடன் வீடுகட்டி வாழ்ந்து வருகிறார்கள் இதை எந்த அரசியல் வந்தாலும் சீர்திருத்தம் செய்ய அனுமதி கிடைக்காது அரசு நினைத்தால் நடக்கும்


புதிய வீடியோ