உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும்?

 தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும்?

பொங்கலுார்: பி.ஏ.பி.,ல் 4ம் மண்டலத்துக்கு, 4வது சுற்று தண்ணீர் பாசனம் நடக்கும் நிலையில் வாவிபாளையம் அருகே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடந்து வருகிறது. கடந்தாண்டு முதல் மண்டல பாசனத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் மட்டுமே விடப்பட்டது. இதனால் முதல் மண்டல பாசன விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளனர். இந்தாண்டு பி.ஏ.பி. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால், 4ம் மண்டல பாசனமே தள்ளிப்போகிறது. இதனால், முதல் மண்டல பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை