உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் அலுவலகம் திறக்கப்படுமா?

தபால் அலுவலகம் திறக்கப்படுமா?

சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, சென்னை, முதன்மை அஞ்சல் துறை தலைவருக்கு அனுப்பியுள்ள மனு:பல்லடம் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பதிவு தபால், சேமிப்பு கணக்கு, மணியார்டர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக, ஜெயபிரகாஷ் வீதியில் உள்ள ஒரே ஒரு தபால் நிலையத்தை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர்.மேற்கு பல்லடத்தில் செயல்பட்டு வந்த கிளை தபால் அலுவலகம், ஐந்து ஆண்டுக்கு முன் திடீரென மூடப்பட்டது. மேற்கு பல்லடம் கிளை தபால் அலுவலகத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி