உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புல்லை விட அற்பமானது கவலை

புல்லை விட அற்பமானது கவலை

அவிநாசி;அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்று ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:நாம் வெளியில் செல்லும்போது நம்மால் மற்றவர்களுக்கு தொல்லை ஏற்படுத்தக் கூடாது.காற்றை விட வேகமாக செல்லக்கூடியது நம் மனம். புல்லை விட அற்பமானது நம் மனக்கவலை.ஆணின் வாழ்க்கை முழுவதும் உற்ற நண்பனாக உடன் வரக்கூடிய நபர், மனைவி மட்டுமே.கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரமாக விட்டுக் கொடுத்து வாழ பழகி கொள்ள வேண்டும்.இல்லற வாழ்க்கையில் ஒரு சில தர்மங்களை இருவரும் சேர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.எந்த தர்மத்தை நாம் கடைப்பிடித்தாலும் மற்றவர் துணை இன்றி நிறைவேற்ற முடியாது.ஒன்றை அழிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது.இவ்வாறு, கல்யாணராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை