உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பசுமாடு மேய்ந்த தகராறு விவசாயி உதடு கிழிப்பு

பசுமாடு மேய்ந்த தகராறு விவசாயி உதடு கிழிப்பு

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன், 50. இவரது மனைவி வேண்டா, 47. இவர்கள் சொந்தமாக பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி, 51, என்பவரது நிலத்தில் பசு மாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.ஆத்திரமடைந்த தெய்வசிகாமணி, பசு மாட்டை பிடித்து மரத்தில் கட்டி வைத்தார். அங்கு வந்த சீனிவாசன், பசுமாட்டை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அங்கிருந்த தெய்வசிகாமணியின் தாய் முனியம்மாள், மனைவி சாமூண்டீஸ்வரி, மகன் பாஸ்கரன் ஆகியோர் சீனிவாசனை சரமாரியாக தாக்கினர். மேலும், சீனிவாசன் உதட்டை தெய்வசிகாமணி கத்தியால் கிழித்ததில் ரத்தம் கொட்டியது. சீனிவாசன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அனக்காவூர் போலீசார் தெய்வசிகாமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி