மேலும் செய்திகள்
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
25-Sep-2025 | 1
சென்னை:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், மேல்முத்தானுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவி சவுந்தர்யா, புதிய கற்கால கருவிகளை கண்டெடுத்து உள்ளார். பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் பற்றிய புரிதலை ஏற்படுத்த, ஆசிரியர்களுக்கு தொல்லியல் அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர். பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் செயல்படுகின்றன. மேல்முத்தானுார் அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளரும், சமூக அறிவியல் ஆசிரியருமான ரேவதி, மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து, தங்கள் பகுதியில் கள ஆய்வில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தி உள்ளார். காவிரிப்பட்டனம் என்ற ஊரைச் சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவி சவுந்தர்யா, நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டபோது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடரிகளை கண்டெடுத்தார். ஆசிரியர் ரேவதி கூறியதாவது: மாணவி சவுந்தர்யா கண்டெடுத்த கற்கோடரி, செல்ட் வகையைச் சேர்ந்தது. இதன் காலம், பொதுயுகத்திற்கு முன் 6,000 முதல் 2,000 ஆண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அதாவது நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன், ஓரிடத்தில் நிலைத்து, நாகரிக வாழ்க்கை வாழத் துவங்கியபோது, கையால் செய்த மண்பாண்டங்கள், சக்கரத்தால் செய்த மண்பாண்டங்களை பயன்படுத்த துவங்கினான். அந்த காலகட்டத்தில், கைக்கு அடக்கமாக, கற்களை முக்கோண வடிவில் தேய்த்து வழுவழுப்பாக்கி, வேட்டை உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தினான். தற்போது கிடைத்துள்ள இரண்டு கருவிகளில் ஒன்று, 10 செ.மீ., நீளம், 4.5 செ.மீ., அகலம்; மற்றொன்று 8 செ.மீ., நீளம், 4 செ.மீ., அகலம் உள்ளது. இவற்றின் அகன்ற பகுதியை கூர்தீட்டி உள்ளனர். குறுகிய பகுதியை பட்டையாக்கி உள்ளனர். இவற்றை மரத்தடியில் கட்டி, ஆயுதமாகவும், நிலத்தை கொத்தவோ, கீறவோ பயன்படுத்தி இருக்கலாம். இது, 8,000 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம். கற்கால வாழ்விடம்
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள கீழையூர், பாதிரி, நாச்சாமலை உள்ளிட்ட இடங்களில், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், காவிரிப்பட்டினத்தில் கற்கருவி கிடைத்துள்ளது. இந்த ஊர், கல்வராயன் மலைத்தொடர் பகுதியில் உள்ளது. பீமாரப்பட்டியில் உருவாகி, தென்பெண்ணையில் கலக்கும் ஒரு சிற்றாறு, இவ்வூர் வழியாக செல்கிறது. அதாவது, மலையில் வாழத் துவங்கிய மனிதன், சமவெளிகள், மலையடிவாரங்கள், ஆற்றங்கரைகளில் வாழ்ந்தான் என்பதற்கு சான்றாக, இந்த கற்கருவிகள் உள்ளன. இந்த பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், கூடுதல் சான்றுகள் கிடைக்கக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார். மாணவி சவுந்தர்யாவையும், ஆசிரியர் ரேவதியையும் தலைமை ஆசிரியர் கொளந்தை பாராட்டினார்.
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025
25-Sep-2025 | 1