மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
3 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
3 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மேற்கு கோபுர தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன், 63. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழில்நுட்ப மேற்பார்வையாளராக இருந்தார்.அப்போது ஜெகநாதன், தன் மகன் பி.இ., படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதாக கார்த்திகேயனிடம் தெரிவித்தார். அதற்கு கார்த்திகேயன், தனக்கு தெரிந்தவர்கள் வாயிலாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.இதற்காக, 2019 முதல், 2021 வரை பல தவணைகளில், 20 லட்சம் ரூபாயை கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் கூறியவர்களின் வங்கி கணக்குக்கு, ஜெகநாதன் அனுப்பினார். ஆனால், கார்த்திகேயன் கூறியபடி அரசு வேலையை பெற்று தரவில்லை.இதையடுத்து, கொடுத்த பணத்தை ஜெகநாதன் திரும்ப கேட்டார். ஆனால், பணத்தை கொடுக்காமல் கார்த்திகேயன் அலைக்கழித்து வந்தார். இது குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று ஜெகநாதன் புகார் அளித்தார்.கார்த்திகேயன், அவரது மனைவி விஜயா மற்றும் தொடர்புடையோர் என, ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025