உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  தி.மலையில் மஹா தீபம் கொப்பரை புதுப்பிக்கும் பணி

 தி.மலையில் மஹா தீபம் கொப்பரை புதுப்பிக்கும் பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றும் தீப கொப்பரை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில், வரும் டிச., 3ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் 'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற உள்ள கொப்பரை, வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், கால் அங்குலம் தடிமனுடன், 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில், ஐந்தரை அடி உயரத்தில் உள்ளது. இந்த கொப்பரையை, மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் பாகத்தில், 4 வளையம், கீழ்பாகத்தில், 4 வளையம் பொருத்தப்பட்டு, இவை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வரும், டிச., 2ம் தேதி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் டிச.,3ல், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை