மேலும் செய்திகள்
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
திருச்சி:திருச்சி, மேலகல்கண்டார்கோட்டையில் மாநகராட்சி இன்ஜி., அலுவலகம் எதிர்புறம், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மார்பளவு சிலை உள்ளது. அந்த சிலைக்கு, அரசியல் கட்சியினர், முக்கிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். நேற்று காலை, அண்ணாதுரை சிலை நெற்றியில் குங்குமம் வைத்து, சிலையின் உடல் பகுதியில் குங்குமத்தை பூசியிருந்தனர். நேற்று காலை இதை பார்த்த அப்பகுதி தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டு, சிலைக்கு குங்குமம் வைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். அவர்களிடம் பொன்மலை போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட வைத்தனர். பின், சிலை கழுவப்பட்டது. பொன்மலை போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Dec-2025
16-Dec-2025 | 1
14-Dec-2025