மேலும் செய்திகள்
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
20 hour(s) ago
காரில் பதுக்கி சரக்கு விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
07-Dec-2025 | 1
திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று காலை, 200க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள், 100க்கும் மேற்பட்ட தபால்கள் சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்த்த பொதுமக்கள், அதில் தங்களின் அட்டைகள், தபால்கள் உள்ளனவா என்று பார்த்து எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து தகவலறிந்த லால்குடி அஞ்சலக ஊழியர்கள் அங்கு வந்து, சிதறிக் கிடந்த ஆதார் அட்டைகளையும், தபால்களையும் சேகரித்துச் சென்றனர்.அவை பூவாளூர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்ய வந்தவை என்று தெரிய வந்துள்ளதால், அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியது யார் என, அஞ்சல் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
07-Dec-2025 | 1