மேலும் செய்திகள்
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
7 hour(s) ago
காரில் பதுக்கி சரக்கு விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
07-Dec-2025 | 1
திருச்சி:பெரம்பலுார் சாமியப்ப நகரைச் சேர்ந்த மதீனாபீ என்ற பெண், தாய் மற்றும் பாட்டி ஆகியோருடன், 4ம் தேதி சென்னை மாதவரத்தில் இருந்து பெரம்பலுார் வந்தார்.நெக்லஸ், தோடு, மோதிரம், பிரேஸ்லெட் என 81 கிராம் தங்க நகைகளையும், வெள்ளிக் கொலுசு, மோதிரம் என 149 கிராம் வெள்ளி நகைகளையும் பஸ்சில் தவற விட்டார். வீட்டுக்குச் சென்றதும் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த மதீனாபீ, பஸ்சில் பயணம் செய்த டிக்கெட்டை காண்பித்து, பெரம்பலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள போக்குவரத்துக் கழக பணியாளர்களிடம் விசாரித்தார். டிரைவர் ரமேஷ், கண்டக்டர் கோபாலன் ஆகியோர் பஸ்சில் கிடந்த நகைகளை, டிப்போவில் ஒப்படைத்த தகவல் தெரிந்தது. திருச்சி புறநகர் கிளைக்கு சென்றார். போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீஸ் முன்னிலையில், நகைகளை, மதீனாவிடம் ஒப்படைத்தனர். டிரைவர், கண்டக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
7 hour(s) ago
07-Dec-2025 | 1