உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் அனந்தரா - 2024 கலைவிழா

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் அனந்தரா - 2024 கலைவிழா

திருச்சி : திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் அனந்தரா - 2024 கலை விழா லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலையின் கலைவிழா பெயர் மற்றும் லோகோ அறிமுக விழா கொண்டாடப்பட்டது. பல்கலை வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி, 'அனந்தரா' கலைவிழா பெயரை அறிவித்து, அதன் லோகாவை வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் 'டீ ஜே' ஆகியவை அனைவரையும் கவர்ந்தது. விழாவில் இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், துணை வேந்தர் ரஞ்சன், பதிவாளர் தனசேகரன் தேவராஜ், புலமுதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த அனந்தரா கலை நிகழ்ச்சி மார்ச் 22 மற்றும் 23ம் தேதி பல்கலை வளாகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை