உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / இயந்திரத்தில் முண்டாசு சிக்கியதில் தொழிலாளி பலி

இயந்திரத்தில் முண்டாசு சிக்கியதில் தொழிலாளி பலி

துறையூர்:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சபெருமாள் பட்டியில், பி.மேட்டூரைச் சேர்ந்த சரவணன், 48, என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இங்கு, உப்பிலியபுரம் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த சின்னாண்டவர், 58, என்பவர், கடந்த ஆறு மாதங்களாக வேலை பார்த்தார்.நேற்று முன்தினம் அவர் பணியில் ஈடுபட்டிருந்த போது, தலையில் துண்டை, தலைப்பாகை போல, முண்டாசு கட்டிக் கொண்டு வேலை பார்த்தார். அப்போது, அவர் தலையில் கட்டியிருந்த துண்டு, வேகமாக ஓடிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கியது.அந்த இயந்திரத்தால் இழுத்து செல்லப்பட்ட அவர், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து, உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ