உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

வேலுார்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பென்னாத்துாரை சேர்ந்த தொழிலாளி துரைராஜ், 32. இவர் மனைவி துளசி, 29. தம்பதியரின் ஒரு வயது பெண் குழந்தை சுஷ்மிதா. துளசி தன் தாய் வீடான லத்தேரிக்கு, குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்றார். அன்றிரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஷ்மிதா, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் குழந்தை, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி