உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வேலுார் அருகே விபத்து; சென்னை மாணவி மரணம்

வேலுார் அருகே விபத்து; சென்னை மாணவி மரணம்

வேலுார் : சென்னையில் ஒரு கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் நெற்குன்றம் விஷ்ணு, 19, ஈக்காட்டுதாங்கல் டிராவிட், 21, ஆயிரம் விளக்கு சக்தி, 21, பொறியியல் கல்லுாரி மாணவி அஸ்வதி, 21, ஆகிய நால்வரும், திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல, சென்னையிலிருந்து காரில் நேற்று காலை புறப்பட்டனர்.வேலுாரை அடுத்த மோட்டூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு கம்பியை உடைத்தபடி, எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது. இதில், காரில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். வேலுாரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி அஸ்வதி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்