உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;5 பேர் காயம்

மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;5 பேர் காயம்

வேலுார்:வேலுார் அருகே, மரத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார். ஐந்து பேர் காயமடைந்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி தமிழரசன், 38, அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் உமர், 24, பிரபு, 28, ரஞ்சித், 26, அருண், 24, மற்றும் ராசையா, 28, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு நோக்கி மாருதி ஸ்விப்ட் காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, பாலுார் அருகே சென்றபோது சாலையோரத்தின் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில், தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற ஐந்து பேர் காயமடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.உம்ராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை