மேலும் செய்திகள்
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் தலைமை பொறியாளர் அலுவலகத்தில், வேலுார் வட்ட, மீட்டர் மின் அளவு மற்றும் சோதனை பிரிவு, செயற்பொறியாளராக ரவிச்சந்திரன் பணிபுரிந்தார். ராணிப்பேட்டையை சேர்ந்த வாசுதேவன், கல்குவாரிக்கு புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார். அனுமதி கிடைக்க தாமதமாகவே ரவிச்சந்திரனை அணுகினார். இணைப்பு வழங்க, 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முதற்கட்டமாக ஜிபேவில், 3,000 ரூபாய் லஞ்சமாக அனுப்பினார். மேலும், ரவிச்சந்திரனிடம் வாசுதேவன் பேசியது, லஞ்சப்பணம் அனுப்பிய ஆதாரம், சமூக வலைதளங்களில் பரவியது.இதையடுத்து, ரவிச்சந்திரனை, சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து, மின்வாரிய அரசு முதன்மை செயலர் தேவராஜ் உத்தரவிட்டார்.
03-Oct-2025
02-Oct-2025