மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
01-Oct-2025
வேலுார்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா, 35. இவரிடம், கடந்த, 2021ம் ஆண்டு, அப்பகுதியை சேர்ந்த, 2 தம்பதியர், 'நாங்கள் நடத்தும் ஆன்லைன் டிரேடிங் பிசினசில் பங்குதாரராக சேர்ந்தால், அதிக லாபம் கிடைக்கும்; முதலீடு செய்யும் பணத்திற்கு மாதந்தோறும், 10 சதவீதம் வருமானம் கிடைக்கும்' என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி, இவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் பணம் பெற்று, 2.56 கோடி ரூபாய் மற்றும், 41 சவரன் நகைகளை, புனிதா கொடுத்தார். இதையடுத்து சில மாதங்கள், டிரேடிங் பிசினஸ் லாபம் என கூறி, 86 லட்சம் ரூபாயை, லாபம் என கூறி திருப்பி கொடுத்தனர். மீதி பணத்தை கொடுக்கவில்லை. இதனால், புனிதா, கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு, 2 தம்பதியரிடம் கேட்டார். அதற்கு அவர்கள் புனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புனிதா, திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலகத்தில் புனிதா நேற்று புகார் அளித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
01-Oct-2025