உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / அரசு நிலம் பத்திரப்பதிவு: உதவியாளர் சஸ்பெண்ட்

அரசு நிலம் பத்திரப்பதிவு: உதவியாளர் சஸ்பெண்ட்

வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், கடந்தாண்டு நடந்த தணிக்கையின் போது, பல காலகட்டங்களில் போலியான ஆவணங்கள் வாயிலாக, பத்திரப்பதிவுகள் நடந்தன. இதில், அரசுக்கு சொந்தமான, 8 ஏக்கர் புறம்போக்கு நிலம், மற்றொரு அரசு நிலம், 73 சென்ட் பலருக்கு போலியான ஆவணம் வாயிலாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததும், ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., சுதாமல்யா, கடந்தாண்டு, 10 நாட்களாக சார் - பதிவாளராக பொறுப்பு வகித்த, காட்பாடி சார் - பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவகுமார் தான், இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தது தெரிந்தது.விசாரணை அறிக்கையை, பத்திரப்பதிவு ஐ.ஜி., ஆலிவர் பொன்ராஜுக்கு, டி.ஐ.ஜி., சுதாமல்யா அனுப்பி வைத்தார். அதன்படி, காட்பாடி சார் - பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை