உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மனைவியை வீடியோ எடுத்து மிரட்டியவர்

மனைவியை வீடியோ எடுத்து மிரட்டியவர்

வேலுார்,:வேலுார் அருகே, மனைவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். வேலுார் அடுத்த, ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த, 32, வயது தனியார் நிறுவன ஊழியர், 30 வயது பெண்ணை, ஆறு மாதத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை, ஆபாசமாக பேசி, குளிக்கும் போது, துணி மாற்றும் போது, மொபைல்போனில் ஆபாச வீடியோ எடுத்து வந்துள்ளார்.இதை கேட்டால், வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, மன உளைச்சலை ஏற்படுத்தி, மிரட்டி வந்தார். நேற்று அப்பெண், போலீசில் புகார் அளித்தார். வேலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ