உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பஞ்., செயலர் வீட்டில்...

பஞ்., செயலர் வீட்டில்...

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பழைய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரபு, 49. இவர், பாலகுப்பம் பஞ்., செயலராக பணிபுரிகிறார். காட்பாடி யூனியனுக்கு உட்பட்ட பல கிராமங்களில் பஞ்., செயலராக பணிபுரிந்துள்ளார். இதில் கடந்த, 2011 - 17ம் ஆண்டில் பல முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கியுள்ளதாக இவர் மீது புகார்கள் எழுந்தன.இதையடுத்து, அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு முறைகேடாக சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இவர், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, யில் தெரிந்துள்ளது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ