மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
01-Oct-2025
வேலுார்:''சிறைப்பணி, ஒரு மருத்துவமனை வார்டன் பணி போல இருக்க வேண்டும்,'' என, சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் பேசினார்.வேலுார் ஆப்காவில், 5 ஜெயிலர்கள், 36 உதவி ஜெயிலர்கள் என, 41 பேருக்கு, 9 மாத சிறைத்துறை பயிற்சி வகுப்பு தொடக்க விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை வகித்தார். சிறைத்துறை ஐ.ஜி., கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியை, சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தொடங்கி வைத்து பேசியதாவது:சிறைத்துறை, டார்ச்சர் சென்டர் கிடையாது. குற்றம் செய்தவர்களுக்கு, தண்டனை வழங்கும் இடமாகத்தான் சிறை உள்ளது. மனித உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது. சிறைப்பணி ஒரு மருத்துவமனை வார்டன் பணிபோல இருக்க வேண்டும். கைதியை காலையில் திறந்து விட்டு, மாலையில் மீண்டும் அடைத்து வைப்பது பணியே கிடையாது. அவர்களை சீர்திருத்தி நல்வழிப்படுத்தி, தண்டனை முடிந்து வெளியேறும்போது, சிறிய தொழில் ஒன்றையாவது கற்று, அதன் மூலம் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் வகையில், அனுப்பி வைப்பது அவசியம். சிறு குற்றங்களுக்கு சிறைக்கு வருவோரை, பெரிய குற்றம் செய்தவர்களுடன் ஒன்றாக அடைத்து வைத்தால், அவர்களும் பெரிய குற்றங்கள் செய்வதற்கான தவறான வழியை அமைந்து விடும். சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கு, தொழில் பயிற்சி கொடுத்து, அவர்களது மனநிலையை மாற்றம் செய்ய வேண்டும். வெளிநாட்டு சிறைகளில், கைதிகளுக்கு போலீஸ் உயரதிகாரிகள் வணக்கம் தெரிவிக்கிறார்கள். கைதிகளுக்கு நாம் மரியாதை கொடுப்பதன் மூலம், அவர்களது மனநிலை மாறுவதோடு, மீண்டும் குற்றச்செயல் செய்ய யோசிப்பார்கள். சிறைகளில் கைதிகளை சீர்திருத்தம் செய்யும் பணி என்பது சவாலானது. அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய தொழில்நுட்பங்களை கையாள ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
02-Oct-2025
02-Oct-2025
01-Oct-2025