உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / 9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை

9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை

குடியாத்தம் : வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சிந்தகணவாயை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சுரேஷ்குமார், 39. இவர், 2017, மே, 24ம் தேதி, 9 வயது சிறுமியை கடத்திச் சென்று அப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோவில் கைது செய்தனர். வழக்கு, வேலுார் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி கலைப்பொன்னி, நேற்று முன்தினம் மாலை சுரேஷ்குமாருக்கு, 25 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும், 9 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி