உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ரூ.2 கோடி சந்தன மரம் கடத்தல்: வேனை விரட்டி பிடித்த போலீசார்

ரூ.2 கோடி சந்தன மரம் கடத்தல்: வேனை விரட்டி பிடித்த போலீசார்

வேலுார்: வேலுார், அருகே, 2 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன மரங்களை வெட்டி கடத்திய மினிவேனை போலீசார் துரத்தி பிடித்து, சந்தன மரங்களை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் வனப்பகுதியில் சந்தன மரம், செம்மரம், தேக்கு என அறிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இரவில் அடிக்கடி மரங்கள் வெட்டி கடத்தும் சம்பவம் தொடர்கிறது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், வேலுார் கலால் போலீசார், ஒடுகத்துார் பகுதியிலுள்ள மலை கிராமங்களில் ரோந்து சென்றனர். அப்போது பீஞ்சமந்தை மலை கிராமத்திலிருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போலீசார் மினிவேலை மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்ற வேன், ஓரிடத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், வேன் டிரைவர் உள்ளிட்ட இருவர், வனப்பகுதியில் புகுந்து தப்பினர். மினிவேனை போலீசார் சோதனை செய்தபோது அதில், 2 முதல், 4 அடி நீளமுள்ள ஒன்றரை டன் எடையுள்ள சந்தன மரங்கள் கடத்தியது தெரியவந்தது. மொத்தம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்து, அதை வேனுடன் ஒடுகத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி