மேலும் செய்திகள்
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
பள்ளிப்பாளையம்: வெப்படையில், மின்வாரிய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்மநபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் பிரசன்னா, 51. இவர், சமயசங்கிலி தடுப்பணை மின் உற்பத்தி நிலையத்தில் இளநிலை பொறியாளராக உள்ளார். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக வேலையாக சென்னைக்கு சென்று விட்டார். இவரது மனைவி கீதா வீட்டை பூட்டி விட்டு, மகளை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அழைத்து சென்றார்.இந்நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை, சென்னையில் இருந்து வீடு திரும்பிய பிரசன்னா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த, 9 பவுன் நகை, 70,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.
03-Oct-2025
02-Oct-2025